தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் மஞ்சளாறில் 4 செ.மீ., ராசிபுரத்தில் 3 செ.மீ., உசிலம்பட்டி திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும். தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று குறைவாக இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP